by : HASSAN
ஜியோனி மொபைல் நிறுவனம் தனது புதிய தயாரிப்பாக இரண்டு வட்ஸ்அப் அப்லிகேஷன்களை பயன்படத்த கூடிய முறையிலான ஸ்மார்ட் கைத்தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கைத்தொலைபேசிக்கு எஸ் 8 என்று பெரியடப்பட்டுள்ளது.
ஐ போன்களில் பயன்படுத்தப்படும் 3டி தொடுதிரை வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அண்ட்ரொய்டு 6.0 மார்ஷ்மாலோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனில் இரண்டு சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் வசதி மற்றும் 64 ஜிபி உள் நினைவகம் என்பவற்றைக் கொண்டள்ளது.
மேலும், இந்த கைத்தொலைபேசி 4ஜிபி சுயுஆ வசதி, 3000 அயுh பெட்டரி, 16 மெகா பிக்சல் பின்புற கேமரா, 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா போன்ற வசதிகளை உள்ளடக்கியது.
தற்பொழுது ஸ்பெயினின் பார்சிலோனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், மிக விரைவில் சர்வதேச அளவில் விநியோகம் செய்யப்படும் என்று ஜியோனி மொபைல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
by : HASSAN
2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்காக நாட்டினை தெரிவு செய்யும் ஏல நடைமுறைகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என சர்வதேச கால்பந்து சபையின் புதிய தலைவர் கியானி இன்ஃபான்ரினோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து சபை ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு இடையில் நடைபெற்ற உத்தியோகபூர்வமற்ற கால்பந்து போட்டிக்கு பின்னர் கருத்து தெரிவித்த இன்ஃபான்ரினோ, 2026 ஆம் ஆண்டுக்காள உலகக்கிண்ண போட்டி நாடுகள் தெரிவு தொடர்பிலும் கருத்துரைத்தார்.
இதன்போது, ‘ எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து சபையின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு முன்னதாக 2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான ஏல நடைமுறைகள் நடைபெறவேண்டும் என நினைக்கின்றேன்.’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ரஷ்யா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் வரலாற்றில் சிறந்ததாக இருக்க வேண்டும். இப்போட்டிகளை நடத்துவதற்கான நாடுகள் தெரிவு கடந்த 2010 ஆம் ஆண்டே இடம்பெற்றது. ஆனால் அதன் பின்னர் ஊழல் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளது. எனினும் இவ்விரு உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளையும் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல.’ எனவும் இன்ஃபான்ரினோ குறிப்பிட்டுள்ளார்.
2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளை ரஷ்யா மற்றும் கட்டாரில் நடத்துவதற்காக முடிவுகளை விசாரிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து சபைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
by : HASSAN
அவுஸ்திரேலியாவின் அண்மித்த மொரெடோன் தீவின் குவின்ஸ்லாந்து கடற்கரைப் பகுதியில் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஆபத்திற்கு இலக்கான சிறுமி ஹெலிக்கொப்டரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் குறித்த கடற்பகுதியில் படகில் பயணித்துக் கொண்டிருந்த 15 வயதான சிறுமியின் தலைமுடி படகின் செலுத்தியில் (புரொப்பல்லெர்) சிக்கிக் கொண்டதில், சிறுமியின் செவிப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து குறித்த சிறுமி படகிலிருந்து நீரில் வீழ்ந்து மூழ்க ஆரம்பித்ததாகவும், சம்வம் தொடர்பில் அறியக் கிடைத்ததும் அப்பிராந்தியக் கடலோரக் காவல் படையினர் ஹெலிக்கொப்டரின் உதவியுடன் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிபலமான விடுமுறை சுற்றுலாத் தலமாக விளங்கும் மொரெடோன் தீவானது, குயின்ஸ்லாந்து தலைநகரின் வடகிழக்கில் இருந்து 58 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
by : HASSAN
ஈராக்கின் டியாலா மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 40 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு டேஷ் ரக்ஃபிரி தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஈராக்கின் டியாலா மாகாணத்தின் பிரிஷ்டெஹ் மாவட்டத்தில் உள்ள கிழக்கு முக்தாதியா நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றினுள்ளேயே இந்த குண்டுத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டியாலா மாகாண பாதுகாப்பு வட்டாரங்கள், நேற்று உள்ளூர் நேரப்படி நண்பகலில் இறுதிச் சடங்கு ஊர்வலம் ஒன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாவும், இதன்போது 42 மக்கள் காயமடைந்துள்ளதாவும் தெரிவித்துள்ளன.
இதேவேளை முக்தாதியா ஆளுநர் அட்னான் அல்-தமிமி இது தொடர்பில் குறிப்பிடுகையில், “குறித்த பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து சடலங்களை அப்புறப்படுத்தியதோடு, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்” எனத் தெரிவித்தார்.
by : HASSAN
ஈராக்கின் பாரிய அணைக்கட்டுக்களில் ஒன்றான மோசூல் அணைக்கட்டு சரிந்து விழும் அபாயம் உள்ளதாக ஈராக்கிய அரசாங்கம் மற்றும் அங்குள்ள அமெரிகத் தூதரகம் என்பன தனித்தனியாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
தைகிறீஸ் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மோசூல் அணைக்கட்டு சரிந்து விழும் அபாயம் உள்ளதன் காரணமாக அப்பகுதியின் ஆற்றங்கரையருகே வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அந்த எச்சரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று மாலை ஈராக்கிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “குறித்த ஆற்றங்கரையருகே வசிக்கும் மக்கள், அதிலிருந்து குறைந்தது 6 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறித்த அணை சரிந்து விழும் அபாயம் தீவிரமடைந்துள்ளது. ஆயினும் இது எப்போது நிகழும் என்பது தொடர்பில் துல்லியமான தகவலை எம்மால் தெரிவிக்க முடியாது. எனவே, முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசூல் அணையானது வட ஈராக்கிய நகரமான மோசூலில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
by : HASSAN
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தோல்விக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உட்பூசல் ஏற்படுவதற்கும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவே காரணமென அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
‘போரை வெற்றிகொண்டு, சுதந்திரக் கட்சியை பெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றவர் என்ற பெருமை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையே சாரும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது உண்மைதான். எனினும், மஹிந்தவின் அரசியல் செல்வாக்கு சரிவதற்கு பஷில் ராஜபக்ஷவே பிரதான காரணமென நாமல் ராஜபக்ஷவே குறிப்பிட்டுள்ளார். இதிலும் உண்மையுள்ளது. மஹிந்த மீது சுதந்திரக் கட்சியினருக்கு அதிருப்தி ஏற்படுவதற்கும், கட்சியில் உட்பூசல்கள் ஏற்படுவதற்கும் பஷிலின் பலவந்த போக்குகளே காரணம். அவ்வாறான நிலையில், தற்போது புதிய கட்சியின் பிரதான செயற்பாட்டாளராக பஷில் செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியையே தருகிறது.
வட மத்திய மாகாண முதலமைச்சராக இருந்த பிரேமலால் திஸாநாயக்க, பஷில் ராஜபக்ஷவின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தார் என்ற காரணத்திற்காக, அவரை பஷில் திட்டமிட்டு தோற்கடித்து அவருக்கு முதலமைச்சர் பதவியை கிடைக்காமல் செய்தார்.
தேர்தல் காலத்தில் சுவரொட்டிகளுக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இலட்சக்கணக்கில் செலவிட்டு, மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார். முன்னொருபோதும் இல்லாத வகையில் கடந்த தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு, வட பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதற்கு மஹிந்தவின் சகோதர்களது இனவாத போக்குகளே காரணம். இனியும் கட்சியின் தலைமைப் பொறுப்பை மஹிந்த ஏற்றால் வட பகுதி மக்களின் வாக்குகள் எமக்கு கிடைக்காமல் போகும். தனித்து, பௌத்தர்களின் வாக்குகளால் மாத்திரம் எம்மால் வெற்றிபெற முடியாது.
தமது கடும்போக்குவாத செயற்பாடுகளால் சுதந்திரக் கட்சியினரின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டுள்ள பஷில் ராஜபக்ஷ, தற்போது புதிய கட்சியில் இருக்கின்றார். அதனால், வேறு எந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் புதிய கட்சியில் இணைந்துகொள்ள மாட்டார்கள். மஹிந்தவின் தோல்விக்கு யார் காரணம் என்ற இந்த உண்மையை அறிந்துகொண்டால், சுதந்திரக் கட்சியிலிருந்து யாரும் விலகிச்சென்று புதிய கட்சியில் இணையமாட்டார்கள்’ என்றார்.
by : HASSAN
இங்கிலாந்து சம்பியன்ஷிப் கிரிக்கட் போட்டிகளுக்கான புதிய அனுசரணையாளராக மூக்குக்கண்ணாடி, லென்ஸ்கள் மற்றும் கேட்டல் உபகரணங்கள் என்பவற்றை உலகெங்கிலும் விற்பனை செய்யும் Specsavers நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
கடந்த 13 வருடங்களாக காப்பீட்டு நிறுவனமான எல்வி நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்த நிலையில் தற்போது Specsavers நிறுவனத்துடன் எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புதிய விளம்பர ஒப்பந்தத்தின் நிதிக்கட்டுப்பாடுகள் வெளியிடப்படவில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து சம்பியனஷிப் போட்டிகளில் யோக்ஷையர் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது. 2016 ஆம் ஆண்டுக்கான தொடர் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
by : HASSAN
வலுவான அணிக்கு எதிரான போட்டியில் தவறுகள் அனுமதிக்கப்பட முடியாது என பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அப்ரிடி, ‘ இவ்வாறான போட்டிகளின் போது சிறிது நேரமும் ஓய்வெடுக்க முடியாது என்பதை இன்றைய போட்டி உணர்த்தியுள்ளது. வீரர்கள் அறையில் ஓய்வு எடுக்க முடியாது. இன்றைய போட்டியின் போதும் நாம் சிறிய தவறுகளை செய்துள்ளோம். ஆனால் இவ்வாறான தவறுகள் வலுவான அணி ஒன்றுடனான போட்டியில் அனுமதிக்கப்பட முடியாது’ என தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் தனது முதலாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் 5 விக்கெட்களால் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
by : HASSAN


அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை பட்டப்பகல் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொலையுண்ட சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் பெண்முகாமையாளர் திருமதி திலீபன் சுலக்சனாவின் சடலம் நேற்று திங்களன்று மாலை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று கல்முனையில் இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. அன்று மாலை 8.00 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அவரது சடலம் கொண்டு செல்லப்பட்டது.
இரண்டு நாட்கள் வைத்தியசாலை செயற்பாடுகளின் பின்னர் நேற்று மாலை 8மணியளவில் சடலம் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.
சடலம் இன்று 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்பிட்டிமுனையிலுள்ள அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பெருந்திரளான பொதுமக்கள் மரணவீட்டிற்கு சென்று தமது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். மாலையில் அடக்கம் செய்யப்படுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கொலைச் சந்தேக நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது என்று கோரி மாதர் அமைப்புகள் ஒரு போராட்டத்தை நடாத்த திட்டமிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 நாள் விளக்கமறியல்!
இதேவேளை கொலைச் சந்தேக நபரான முன்னாள் முகாமையாளர் பொன்னம்பலம் உதயகுமாருக்கு 14 நாள் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பொலிசார் நேற்று மாலை 5மணியளவில் கல்முனை மாவட்டநீதிபதியும் பதில்நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமாகிய இராமகமலன் முன் சந்தேகநபரை ஆஜர்ப்படுத்தினர். அவர் குற்றத்தை ஒப்புக் கொண்ட கொலைச் சந்தேக நபரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தனக்கேற்பட்ட அவமானம், மன உளைச்சல், விரக்தி காரணமாகவே இக்குற்றத்தை செய்ததாக பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் தெரிகிறது.
இதேவேளை கல்முனைப் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எ.டபிள்யு.அப்துல்கபார் தகவல் தருகையில்,
இக் கொலைச்சம்பவம் தொடர்பில் நாம் மேலும் பல தகவல்களைப் பெற்று வருகின்றோம். விசாரணை மிகவும் சரியான திசையில் நடைபெற்று வருகிறது. வங்கியில் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது என்றார்.
காரைதீவு நிருபர் சகா-
by : HASSAN


நாம் இந்த நாட்டில் பலமாக இருக்கும் வரையில், இந்த நாட்டில் எந்த தோற்றத்திலும் இனக் கலவரமொன்று ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
சிங்க இரத்தம், தமிழ் இரத்தம், முஸ்லிம் இரத்தம் என சொல்கிறார்கள். இருப்பினும், எம்மிடம் இருப்பது மனித இரத்தம் ஒன்று மட்டுமே. ஒருவரை ஒருவர் கோபத்துடனும், குரோதத்துடனும் பார்க்கும் ஒரு சமூகம் எமக்குத் தேவையில்லை. சிங்கள, தமிழர், முஸ்லிம், பேகர், மலே ஆகிய சகல இன மக்களும் ஒன்றுமையாக மனிதத்துவத்துடன் வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எமக்கு இந்நாட்டில் இனவாதத்துக்கு எதிராக ஒரு போராட்டம் உள்ளது.
எமது நாடு 30 வருட யுத்தத்துக்கு முகம் கொடுத்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை இது வரை கூறமுடியாதுள்ளது. அழிந்த சொத்துக்கள் எவ்வளவு என தெரியாது. இந்த நாடு இரத்தத்தால் நனைந்தது. கண்ணீரினால் கழுவப்பட்டது. வரலாற்றில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்நாட்டில் சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம், முஸ்லிம் இனவாதம் என உருவாக்கப்பட்டன. இதற்காக, வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் சாதாரண தாய், தந்தையின் பிள்ளைகள் பொறுப்பாளர்கள் அல்லர்.
வடக்கினதும், தெற்கினதும் அதிகாரத்தை பெறுவதற்காக இனவாதத்தை தூண்டி விட்டனர். யுத்தமொன்றுக்கு இழுத்துச் சென்றனர். இந்த யுத்தத்தினால் இறந்தவர்கள் சாதாரண தாய், தந்தையின் பிள்ளைகள். வடக்கில் மாத்திரம் யுத்தத்தினால் விதவையானவர்கள் 40 ஆயிரம் பேர் உள்ளனர். தாய், தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள் 2500 பேர் உள்ளனர்.
இந்த யுத்தம் மனித நேயத்தையும், ஒற்றுமையையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது. இவை அனைத்தும் பொது மக்களுடையது. ஆட்சியாளர்கள் இந்த இனவாத யுத்தத்தில் உயிரை விடவில்லை. அவர்கள் இனவாதத்தை தூண்டியவர்கள் மட்டுமே. பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மாத்திரமே. அவர்கள் ஆட்சியை மாத்திரமே எதிர்பார்க்கின்றனர். இது இவ்வாறிருப்பதனால், இந்த நாட்டில் இதன் பின்னர் ஒரு யுத்தம் ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போது கூறினார்.
by : HASSAN
அடுத்த வரும் வாரங்களில் அதிரடி கைதுகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் இந்த கைதுகள் அமையவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012ம் இடம்பெற்ற தாஜுதீன் கொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து அது விபத்தல்ல கொலையென கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 16 பேரின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளது. இவர்கள் சூழ்நிலைச் சாட்சியங்களின் அடிப்படையில், கைது செய்யப்படவுள்ளனர்.
அந்தக் காலகட்டத்தில் பதவியில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் பலரும் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் சாட்சியங்களை மறைத்து, விசாரணைகளைத் திசை திருப்பியுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
அதேவேளை, முதற்கட்டமாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் காணாமற்போனமைக்கு இவரே பொறுப்பாக இருந்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது.
by : HASSAN
கண்டி நகரின் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு மற்றுமொரு பரீட்சார்த்த நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்படி, இன்று மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் இரு பாதைகளின் போக்குவரத்து ஒழுங்குகளை ஒரு வழிப்பாதையாக்க போக்குவரத்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வில்லியம் கோபல்லாவ மாவத்தை ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள புத்தர் சிலையின் முன்னால் இருந்து கெட்டம்பே வரை உள்ள பாதையில் வாகன போக்குவரத்து கெட்டம்பே வரையில் மாத்திரம் பயணிக்கும்.
கெட்டம்பே தியகபநாராம அருகிலுள்ள சுற்றுவட்டம் முதல் கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் வரையுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை வழியான வாகனப் போக்குவரத்துக்கள் நகர் பக்கமாக மாத்திரமே இடம்பெறும்.
கடந்த பெப்ருவரி 16 ஆம் திகதி அறிமுகம் செய்த வாகனப் போக்குவரத்துப் பரீட்சார்த்த திட்டமும் கண்டி நகருக்குள் இன்னும் செயற்படுத்தப்படுவதாகவும் கண்டி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
by : HASSAN
நான்கு பேருக்கு அதிக எண்ணிக்கையானோரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
முச்சக்கரவண்டிகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் சந்தர்ப்பங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழப்பதாக, வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனப் போக்குவரத்து தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்
இவ்வாறு அதிக எண்ணிக்கையான பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று நேற்று பண்டாரகமயில் விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்
கடந்த வருடத்தில்முச்சக்கரவண்டி விபத்துக்களில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களுள் 23 பேர் ஐந்து வயதுக்கு குறைவானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
by : HASSAN
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்களை மிகுந்த தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் இந்தப் பிரச்சனைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீர் கசிவு மற்றும் மகளிர் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.
* முதுமையில் நான்கில் ஒரு பெண்ணுக்கு சிறுநீரை அடக்க முடியாத பிரச்சனை இருக்கிறது. ஒரு காலத்தில் வயதானவர்களின் பிரச்சனையாக இருந்த இது, இன்று இளம் வயதினரையும் தாக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது 30 பிளஸ்சில் உள்ள பெண்களையும்…
* ‘‘இருமும் போது, தும்மும் போது, சிரிக்கும் போது, திரும்பி உட்கார்ந்தாலோ, திரும்பிப் படுத்தாலோ சில பெண்களுக்கு சிறுநீர் கசிவு உண்டாகும். இன்னும் சிலருக்கு உடனடியா சிறுநீர் கழித்தாக வேண்டிய உந்துதல் ஏற்படும். கழிவறைக்கு ஓடற வரைக்கும் கூடக் கட்டுப்படுத்த முடியாது.
* அடிக்கடி சிறுநீர் கழிக்கிறது, சிறுநீர் கழிக்கும் போது சிரமம், கர்ப்பப்பை இறக்கம், அரிதா சிலருக்கு மலத்தையும் அடக்க முடியாதது.. இதெல்லாம் மகளிர் சிறுநீரியல் பிரச்சனைகள்ல அடக்கம். முதலில் முதுமைல வந்திட்டிருந்த இந்தப் பிரச்சனை, இப்ப இளம் பெண்களுக்கும் வருது.
* இடுப்பெலும்பு தசைகள் பலவீனமாகிறது, சுகப்பிரசவத்துக்குப் பிறகு உண்டாகிற பலவீனம், நரம்புகள்ல உண்டாகிற பலவீனம், முதுமை, மெனோபாஸ் காரணமாக உண்டாகிற தசைகளோட தளர்ச்சி, கர்ப்பப்பை இறக்கம், கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைனு இந்தப்பிரச்னைகளுக்கான காரணங்கள் ஏராளம்.
* உளவியல் ரீதியா பெரிய சங்கடத்தைக் கொடுக்கிற பிரச்சனை இது. சிறுநீரை அடக்கவும் முடியாது. சிரமப்பட்டு அடக்கினாலும், அது இன்ஃபெக்ஷனை உண்டாக்கும். வெள்ளைப்படுதல், ரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். எந்த பொது இடத்துக்கும் போக முடியாது.
* போனதும் உடனே அவங்க தேடற இடம் கழிவறையாதான் இருக்கும். வேலைக்குப் போற பெண்களா இருந்தா, பிறந்த குழந்தைங்க உபயோகிக்கிற மாதிரியே பெரியவங்களுக்கான டயாப்பர் உபயோகிக்க வேண்டியிருக்கும். சிறுநீர் கசிஞ்சு, உடையெல்லாம் நாற்றமடிக்கும். அதனால எப்போதும் தனிமைலயே இருப்பாங்க.
* பலரும் நினைச்சிட்டிருக்கிற மாதிரி இது குணப்படுத்த முடியாததில்லை. பாதிக்கப்பட்ட பெண்களை முதல்ல எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறாங்கனு குறிக்கச் சொல்லுவோம். யூரோடைனமிக்ஸ்னு சொல்ற சோதனை செய்வோம்.
சிறுநீர் குழாய்லேர்ந்து, ஒருவித ரப்பர் குழாயைப் பொருத்தி, அதை கம்ப்யூட்டரோட இணைச்சு, பிரச்னையோட தீவிரத்தைக் கணக்கிடுவோம். சிலவித உடற்பயிற்சிகள், மிதமான மருந்துகள், தேவைப்பட்டா ‘ஸ்லிங்’னு சொல்லக் கூடிய அறுவை சிகிச்சை மூலமா இதைக் குணப்படுத்தலாம்…’’ என்கிறார்
by : HASSAN
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் கோலா போன்ற கார்பானிக் குளிர் பானங்களையே அதிகம் அருந்துகிறோம். ஆனால் இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink).
இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று, பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டொக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.
மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.
சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..
பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.
டைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.
உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.
உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.
குடிநீர் “விஷமானால்” அனைத்து நரம்பு பாகங்களையும் பாதிக்கும்!
குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.
அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ”1” இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.எண் ”2” இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.
எண் ”3” என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.
எண் ”4” எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.எண் ”5” பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,
எண் ”6” இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.
இதுதவிர எண் ”7” இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.
இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்
தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ”மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ”ஒன்ஸ் யூஸ்” பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ”மெல்லக் கொல்லும் விஷமாகி” நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்” என்றார்.”
by : HASSAN
புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் ஐபோனுக்கு மாறிக் கொள்ள வகை செய்திடும் செயலி ஒன்றை Move to iOS என்ற பெயரில் தந்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், வயர் இணைப்பு இல்லாமலேயே, பழைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து, புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றிக் கொள்ளலாம். Contacts, messages, photos, videos, mail, calendars , wallpapers and DRM-free music மற்றும் books ஆகியவற்றையும் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த செயலியை இயக்கினால், உங்களுடைய தற்போதைய ஆண்ட்ராய்ட் செயலிகளையும், ஐபோன் செயலிகளையும் ஒப்பீடு செய்கிறது. இலவச செயலிகள் அனைத்தும் தாமாகத் தரவிறக்கம் செய்யப்படுகின்றன.
iOS 9 வெளீயீட்டில் இந்த செய்தி வந்துள்ளது. இந்த வருட பிற்பகுதியில் Move to iOS செயலி மற்றும் iOS 9 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
by : HASSAN
ஐ.நாவின் ஊழல்களையும், குறிப்பாக தமிழீழப்படுகொலையில் பங்குபெற்றதைக் குறித்தும் அம்பலப்படுத்திக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர் மேத்யூலீ ஐ.நாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இவர் பணியாற்றிய இன்னர்-சிட்டி பிரஸ் பத்திரிக்கை ஐ,நாவின் நடவெடிக்கைகளைக் குறித்து விமர்சனப்பூர்வமாகவும், அதன் நம்பகமற்றத் தன்மைகொண்டவர்களையும் அம்பலப்படுத்திக்கொண்டிருந்தது.
ஐ.நாவின் பத்திரிக்கையாளர் குழுவின் தலைவருக்கு இலங்கையின் அதிகாரி பலிதகொஹன்னா லஞ்சமாக வாடகை என்கிற பெயரில் பணம் கொடுத்தது முதல், ஈழப்படுகொலையில் ஐ.நா இழைத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மூடி மறைக்க முயன்ற தருணத்தில், அந்த அறிக்கையின் மிக முக்கிய பக்கங்களை எடுத்து அம்பலப்படுத்தினார்.
இலங்கையைப் பற்றி தொடர்ந்து குரல் எழுப்பியவர் இவர். ஐ.நாவிற்கு சங்கடமேற்படுத்தும் வகையில் இவரது கேள்விகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது.
சேனல்4 காணொளியை ஐ.நாவில் திரையிட ஐ.நா அதிகாரிகள் அனுமதிக்கவில்லை , மாறாக, இலங்கை சேனல்4ற்கு எதிராக எடுத்த பொய் காணொளி திரையிடப்பட்டதை கண்டித்தும் இவர் கேள்வி எழுப்பியவர்…
விஜய்நம்பியாரின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தியதில் இருந்து , கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைத்த தகவல் வரை ஐ.நாவின் செயல்பாடுகளை உலகிற்கு கொண்டுவந்த அச்சமற்ற ’போராளி’ பத்திரிக்கையாளர்.
பான் -கி-மூனிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்புகள் என பல்வேறு விவரங்களை உலகிற்கு அம்பலப்படுத்தி தமிழர்களுக்கு பெரும் துணையாக இருந்த மாத்யூலீக்கு தமிழர்கள் எவ்வகையான ஆதரவை வழங்கப் போகிறார்கள் ? குறைந்த பட்சம் ஐ.நாவிற்கு எதிர்ப்பினை பதிவு செய்வார்களா?..
விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுகிறோம், விமர்சனம் செய்கிறோம் என்று இலக்கிய-படைப்பாளி-அறிவுசீவிகள் முதல் பலர் களம் இறங்கிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ‘இலங்கையின் குற்றங்கள்’ , ‘சர்வதேசத்தின் குற்றப்பங்களிப்புகள்’ ஆகியவற்றை சமரசமின்றி உலகிற்கு அம்பலப்படுத்தும் இதுபோன்ற போராளிகளே தமிழினத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கு தேவையானவர்கள்.
இவரது குரல் நசுக்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தின் அறிவுசீவிகள் , படைப்பாளிகள், இலக்கியவாதிகள் குரல் கொடுப்பார்களா?…
கருத்துச் சுதந்திரமற்றவர்கள் என்று புலிகளுக்கு எதிராக பக்கம் பக்கமாக எழுதிய கனவானகள் , ஐ.நாவின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகவும் பேசுவார்களா?
ஈழம் என்று பேசினால் தங்களது தரம் தாழ்ந்துவிடும் என்று நகர்ந்து செல்லும் பல்வேறு அறிவிசீவிகள் மேத்யூலீ ஆச்சரியமானவராகவே தோன்றுகின்றார்.
என்.ஜி.ஓக்களின் தாயகமாக விளங்கும் ஐ.நாவினை எதிர்த்து குரல் கொடுக்க மறுக்கும் தமிழகத்தின் அறிவுசீவிகளின் பின்னனியில் இயங்குவதும் என்.ஜி.ஓக்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமன்று.
மேத்யூலீக்காக குரல் கொடுப்பார்களா? இல்லையா என்று இவர்களது நேர்மையை அறிந்துகொள்ள முயல்வோம்.
by : HASSAN
தாஜுதின் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை மூடி மறைத்தமை தொடர்பாக முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாஜுதினின் மரணம் இடம்பெற்ற பின்னர் அது விபத்து என தெரிவித்து குறித்த மரணம் தொடர்பான விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இந்த விடயம் தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த மரண சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அது தொடர்பான விசாரணையை நடத்திய பொலிஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
by : HASSAN
தனது முகநுாலில் வந்த கீழ்த்தரமான விமர்சனங்களை நீக்காமல் அப்படியே விட்டுவிடுமாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்ததாக கனிமொழி கூறினார்.
ஆட்சி மாற்றத்திற்கு சமூக வலைத்தளங்கள் பங்களிப்பு என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி, கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “தமிழக மக்கள் இன்று சுயமரியாதையோடு வாழ பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம். ஆனால் திராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்துவிட்டது என்று சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன.
இது தி.மு.க வை அழிக்க நினைப்பவர்கள் செய்யும் பிரச்சாரம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. கூகுள் செய்து பார்த்தாலே இது தெரிந்து விடும்.
ஆனால் இன்று அதிமுக ஆட்சியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்றைக்கு தமிழகம் பீகாரை விட மோசமான மாநிலமாகிவிட்டது. இதுபோன்ற உண்மைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
மழை வந்தாலும், வெயில் வந்தாலும் தி.மு.க மீதுதான் பழி சுமத்தப்படுகின்றது. அதிமுக செய்யும் தவறுகளில் நம்மையும் இழுத்து விடுகிறார்கள். அதில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். இட ஒதுக்கீட்டை தி.மு.க கொண்டு வந்தது.
ஒடுக்கப்பட்டவர்களும் இன்று உயர் பதவியில் இருக்க காரணம் திமுகதான் என கடந்த கால நிகழ்வுகளை வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டும். பெண்கள் வாக்குகளை குறி வைத்துதான் மதுவிலக்கு கொள்கையை தி.மு.க அறிவித்துள்ளது என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். பெண்களுக்கு சமமாக ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் வாக்குகளை விட்டு விடலாமா?
இன்று குடும்பங்கள் சீரழியும் நிலை இந்த மதுவால் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. அதனால்தான் கலைஞர் மதுவிலக்கை அறிவித்துள்ளார். மதுவிலக்கை அமல்படுத்தாததற்கு காரணம் தமிழகத்திற்கு நிதிவருவாய் குறைந்துவிடும் என்பதல்ல. மதுபான நிறுவனமான மிடாசுக்கு வருமானம் இல்லாமல் போய் விடும் என்பதற்காக.
ஜெயலலிதா நல்லவர், அவரைச் சுற்றியுள்ளவர்கள்தான் கெட்டவர்கள் என்றும், ‘அம்மா’ கற்பூரம் போன்றவர் என்றும் பேசுகிறார்கள். ஜெயலலிதா நனைந்து போன கற்பூரம். அதிகாரம் அனைத்தும் ஜெயலலிதா கையில்தான் உள்ளது.
அமைச்சர்கள் கெட்டவர்கள், சசிகலா கெட்டவர், ஆனால் ஜெயலலிதா மட்டும் நல்லவர் என்ற பிரச்சாரத்தை உடைத்து மக்களுக்கு உண்மையை புரிய வைக்க வேண்டும்.
தி.மு.க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னை மாற்றி கட்டமைத்து வந்துள்ளது. முதலில் நாடகங்கள், பின்னர் திரைப்படங்கள், பத்திரிக்கைகள் மூலமாக மக்களிடம் தொடர்பு கொண்டோம். தற்போது இணையதளம் மூலமாக நமது பணியை செய்து வருகிறோம்.
தலைவர் முகநூலில் பக்கம் தொடங்கிய பொது பலபேர் அதில் பதிவுகள் செய்தார்கள். சிலர் தகாத வார்த்தைகளை கீழ்த்தரமான பதிவுகளை செய்தார்கள். அப்போது அந்த பதிவுகளை நீக்கி விடலாமா என்று அவரிடம் கேட்டபோது அதனை முழுமையாக மறுத்து விட்டார்.
‘விமர்சனங்கள் வந்தால் நீக்கவேண்டாம். அது அப்படியே இருக்கட்டும்’ என்று கூறிய பண்புடையவர் கருணாநிதி” என்றார்.
நிகழ்ச்சியில் பல மாவட்டங்களில் இருந்து வலைதள பயனாளிகள் கலந்து கொண்டனர். கனிமொழி பேசிய பின்னர் சமூக வலைதளங்களில் தி.மு.க எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கலந்துரையாடல் நடைபெற்றது. வெளி நாடுகளில் வேலை செய்யும் தி.மு.க தொண்டர்களிடம் ஸ்கைப் மூலமாக கனிமொழி பேசினார்.
by : HASSAN
பண்டாரவளை-பதுளை பிரதான வீதியின் 7ஆவது மையில் கல், பதுளை உடுவரை தமிழ் வித்தியாலயத்துக்கு முன்னால் இன்று (29) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், டபிள்யூ.எம்.பிரியலதா (47) என்ற ஆசிரியை ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, உடுவரை தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியையே இவ்விபத்தில் பலியாகியுள்ளார்.
விபத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாகவும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை முடிவடைந்து வீடு செல்வதற்காக பிரதான வீதியில் காத்திருந்த போது, அவ்விடத்துக்கு வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏற முற்பட்டுள்ளார். இதன்போது பஸ்ஸூக்கு பின்னால் வந்த லொறி ஒன்று பஸ்ஸூடன் மோதியதையடுத்து ஆசிரியை தவறி கீழே விழுந்து பஸ்ஸூக்கும் லொறிக்கும் இடையே நசுங்குண்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
மேலும், அவருடன் இருந்த இரு ஆசிரியைகளும் படுகாயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பஸ் மற்றும் லொறியின் சாரதிகளை கைதுசெய்துள்ளனர்.
by : HASSAN
தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்"னு சொல்வாங்க. அதுகூட... மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம். அது கொடுக்கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசானவங்களுக்கு வரக்கூடியது, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒருவித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம்புல உள்ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியாகி வேலை செய்யறதோட விளைவு இது.
30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள்லகூட இந்த வலியை உணரலாம். முக்கியமா காலை நேரத்துல வலி அதிகமிருக்கும். இது சீசனுக்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்பரையாகவும் தாக்கக்கூடியது.
எந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பிடற உணவோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாருக்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல்லிட முடியாதுங்கிறாங்க அவங்க.
பரம்பரைத்தன்மையோ, வேற காரணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம், அவங்களோட டயட்!
மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங்களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரும் அசைவ உணவுப்பழக்கம் உள்ளவங்களா இருந்தது தெரிய வந்ததாம். முதல் கட்டமா, அசைவத்துலேர்ந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறச் சொன்னபோது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையறதை உணர்ந்திருக்காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது அசைவ உணவு.
அப்படின்னா சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையான்னு கேட்கலாம். அவங்களும் கொழுப்பு குறைவான உணவை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க.
சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக்காளி, பால் மற்றும் பால் பொருட்கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல்கஹால், முட்டை, வேர்க்கடலை, அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி... இதெல்லாம் மூட்டுவலியை அதிகப்படுத்தற உணவுகளாம். மூட்டு வலியோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும்.
இதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக்கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக்கு. வலியோட வீக்கமும் சேர்ந்திருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும்.
மூட்டுவலி வந்ததுமே என்னவோ ஏதோனு அலறத் தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாருங்க. நீங்க அடிக்கடி விரும்பிச் சாப்பிடற ஏதோ ஒரு உணவுகூட அலர்ஜியாகி, வலியைக் கொடுத்திருக்கலாம். அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய், அதையும் அளவோட எடுத்துக்க வேண்டியது முக்கியம். எதுலயும் குணம் தெரியாதப்ப, மருத்துவரைப் பார்க்கலாம்.
by : HASSAN
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும்
தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.
இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.
இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.
இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட
கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.
ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை
ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.
அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல்
ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில
உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.
பார்லி :
தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு,
கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.
கத்திரிக்காய் :
கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம்.
ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.
மீன் :
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன்
மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.
ஆப்பிள் :
ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில்
தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.
நட்ஸ் :
நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை
உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
டீ :
அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால்,
உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
வெங்காயம் :
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை
அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஓட்ஸ் :
ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில்
தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.
முழு தானியங்கள் :
முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு
போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
சிட்ரஸ் பழங்கள் :
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும்
கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
பசலைக் கீரை :
பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக்
கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
சோயா பொருட்கள் :
சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
பூண்டு :
பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால்
அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.
வெண்டைக்காய் :
கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில்
கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால்,
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
சாக்லெட் :
சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட
கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.
பீன்ஸ் :
அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த
நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். (Note this)
மிளகாய் :
மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும்
பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.
மார்கரைன் :
இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.
அவகேடோ :
இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.
ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட
கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.
by : HASSAN
சோதனைகளை எதிர்கொள்வது எப்படி? என்ற தலைப்பில் சேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் உரையின் சில கருத்துக்கள்.
ஆங்காங்கே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அல்லாஹ் கேட்க மாட்டானா?
இந்த உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் அறிவின்றி நடக்காது!
அவன் அனைத்தையும் படைத்தைவன் ஞானம் மிக்கவன், அருளாளன்!
அவன் நம்மை சோதிப்பான்! கேள்வி கேட்பான் – அவனிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது!
இந்த உலகம் சோதனக் களம்! அவன் நல்லவர்களைப் பிரித்தெடுப்பான்
இறுதியில் மறுமையில் வெற்றியாளர்களுக்கு சுவர்க்கத்தை பரிசாகக் கொடுப்பான்.
அந்த சுவர்க்கத்திற்கு உரியவர்கள் – நபிமார்கள் – ஸகாபாக்கள் – மற்றும் நேர்வழி பெற்றவர்கள்
அவர்கள் பல வகையான சோதனைகளில் பொறுமையுடன் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள்
அல்லாஹ்வின் பாதையில் தங்களது உயிரையும் தியாகம் செய்தவர்கள்.
சோதனயில் அல்லாஹ்வின் ஞானம் உள்ளது!
நமது வேண்டல்களைக் கேட்கின்றான்.. சில காலம் எல்லாவற்றிற்கும் அவகாசம் கொடுக்கின்றான்..
இறுதியில் நிச்சயம் நேர்வழியில் செலவர்களுக்கு வெற்றி!
அப்பாவி முஸ்லிம்கள் காசா பகுதியில் யுதர்களால் கொல்லப்படுகின்றார்கள்.
உண்மையான முஸ்லிம்கள் தன் உடன்பிறப்பாகக் கருதி துடிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் அனைவர்களும் உடன்பிறப்புகள்..
மேலும் அறிய - வெப்சைட்டில் சென்று முழுமையாக வீடியோவைக் கவணிக்கவும்.
சோதனைகளை எதிர்கொள்வது எப்படி? என்ற தலைப்பில் சேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் உரையின் சில கருத்துக்கள்.
ஆங்காங்கே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அல்லாஹ் கேட்க மாட்டானா?
இந்த உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் அறிவின்றி நடக்காது!
அவன் அனைத்தையும் படைத்தைவன் ஞானம் மிக்கவன், அருளாளன்!
அவன் நம்மை சோதிப்பான்! கேள்வி கேட்பான் – அவனிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது!
இந்த உலகம் சோதனக் களம்! அவன் நல்லவர்களைப் பிரித்தெடுப்பான்
இறுதியில் மறுமையில் வெற்றியாளர்களுக்கு சுவர்க்கத்தை பரிசாகக் கொடுப்பான்.
அந்த சுவர்க்கத்திற்கு உரியவர்கள் – நபிமார்கள் – ஸகாபாக்கள் – மற்றும் நேர்வழி பெற்றவர்கள்
அவர்கள் பல வகையான சோதனைகளில் பொறுமையுடன் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள்
அல்லாஹ்வின் பாதையில் தங்களது உயிரையும் தியாகம் செய்தவர்கள்.
சோதனயில் அல்லாஹ்வின் ஞானம் உள்ளது!
நமது வேண்டல்களைக் கேட்கின்றான்.. சில காலம் எல்லாவற்றிற்கும் அவகாசம் கொடுக்கின்றான்..
இறுதியில் நிச்சயம் நேர்வழியில் செலவர்களுக்கு வெற்றி!
அப்பாவி முஸ்லிம்கள் காசா பகுதியில் யுதர்களால் கொல்லப்படுகின்றார்கள்.
உண்மையான முஸ்லிம்கள் தன் உடன்பிறப்பாகக் கருதி துடிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் அனைவர்களும் உடன்பிறப்புகள்..
மேலும் அறிய - வெப்சைட்டில் சென்று முழுமையாக வீடியோவைக் கவணிக்கவும்.
by : HASSAN

அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் விண்வெளியில் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், யூகேன் கெர்னன் ஆகியோர், பூமியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் மைல்கள் தொலைவில் சந்திரனின் மறுபக்கம் இந்த அபூர்வ இசையை கேட்டனர். அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவு செய்து வைத்துள்ளது.

இதுநாள்வரை இந்த அபூர்வ இசை தொடர்பான செய்திகள் வெளியாகாதது ஏன்? என்பது குறித்து நாசா தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.
எனினும், விண்வெளி ஆராய்ச்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் தங்களது விண்வெளிப் பயணத்தின்போது ஆய்வாளர்கள் சந்திக்கும் விபரீதமான, விசித்திரமான அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, 1969ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.
அப்போது, அது என்ன சப்தம்? என்பதை அறியாமல் இருந்த ஆர்ம்ஸ்டிராங், பூமிக்கு திரும்பிய பின்னர், எகிப்துக்கு சென்றிருந்தபோது அதே சப்தத்தை அங்கு கேட்க நேரிட்டது. அது என்ன சப்தம்? என்று தனது அருகில் இருந்த நண்பரை ஆர்ம்ஸ்டிராங் கேட்டதாகவும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கொலியின் சப்தம் என அந்த நண்பர் தெரிவித்ததாகவும், இதையடுத்து, ஆர்ம்ஸ்டிராங் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும் இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.
by : HASSAN
சர்வ வல்லமை மிக்க கடவுள் படைக்கப்பட்டாலே அவன் கடவுள் தன்மையை இழந்து விடுவான் .
ஒரு உதாரணத்திற்கு கடவுள்க்கு ஒரு மகன் என்று வைத்துக்கொண்டால் .. கடவுள் இயலாதவன் ஆகி விடுவான் .
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.Al-Quran112:3,4
உலகில் உள்ள எந்த பொருளை எடுத்தாலும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிடும் பொது ஏற்ற தாழ்வுகள் இருக்கும் .. சிலருக்கு பெரிதாக தெரியும் ஓர் விடயம் சிலருக்கு சிறிதாக தெரியலாம் .
அனால் கடவுள் என்பவன் அதற்கு அப்பாற்பட்ட சக்தியாக இருக்க வேண்டும் .
அவனை யாரும் படைத்திருந்தால்??
படைப்பவன் படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா?
(16:17)
அல்லாஹ் வைத் தவிர (வேறு) படைப்பவன் உண்டா? (35:3)
பகுத்தரிவிற்கமைய சிந்திக்காமல் இயற்கை என்று முடிப்பது நாத்திகர்களின் வழமை .. சான்றுகளை வைத்து கடவுள் என்று முடிப்பது தான் சிறந்தது ..
பகுத்தறிவுள்ள மனிதன் எப்பொழுதும்சிறந்ததை தேர்ந்த்டுப்பான்.
உலகை எவாறு தோன்றியது? அணு வெடிப்பின் (BIG BANG)மூலம் .. அந்த அணு எவ்வாறு தோன்றியது ?
ஒண்டுமே இல்லாத அந்த அணுவை முதலிடத்தில் வைப்பதை விட பகுத்தறிவுள்ளவன் கடவுளை அந்த இடத்தில வைப்பான் .
நீங்கள் 1400 வருடம் கழித்து இந்த கேள்வி கேட்பீர்கள் என்று முஹம்மதுக்கு எப்படி தெரியும் ?இதோ திருக்குரான் இப்படி கூறுகிறது .
``...... அவர்கள் அல்லாஹ் படைத்தது போல் படைத்து அதன் காரணமாக படைத்தது யார் என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன். அவன் தனித்தவன். அடக்கியாள்பவன். (13:16)
இன்னும் இதை விரிவாக பார்ப்போமானால்
கடவுளை கூட சும்மா உயர் நிலையில் வைக்க சொல்லவில்லை .
நாத்திகர்கள் கூறும் இயற்கை படி -
பேரண்டத்தின் ஈர்ப்பு விசை அல்லது அதன் பயன்பாடு மற்றும் செயற்பாடு அல்லது அதன் விசையைக் கட்டுப்படுத்தா விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் , இருக்க வேண்டும் .
ஆகாயம் வீழ்ந்து விடாதவாறு தடுக்க வேண்டிய தேவை உண்டு; அதனால் அது தடுக்கப்பட்டு வருகிறது என திருக்குர்ஆனால் எப்படிக் கூற முடியும்?
எனவே குறைந்த பட்சம் பேரண்டத்திற்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதும் மேலும் அதை சமன் செய்யும் மற்றொரு ஆற்றல் இப்பேரண்டத்தில் வெயல்பட்டு வருகிறது எனும் கருத்தும் இந்த வசனத்தில் (22:65) இருந்து தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது.
(முஹம்மதே!) பூமியில் உள்ளதையும் அவனது கட்டளைப் படி கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்காக பயன்படச் செய்திருப்பதை நீர் அறியவில்லையா? அவன் கட்டளை யிட்டால் தவிர பூமியின் மேல் வானம் விழாதவாறு தடுத்து வைத் துள்ளான். அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன். (22:65)
பெருவெடிப்புக்கு(BIG BANG) முன்னர் ஏது இயற்கை?
இயற்கை(???) என்ற பெயரில் ஏதேனும் ஒன்று செயல்பட வேண்டுமானால் பொருட்கள் இருக்க வேண்டும். எனவே பொருள் இல்லையேல் இயற்கையும் இல்லை. பெரு வெடிப்புக்கு முன்னால் பொருட்கள் ஏதும் இல்லை யென்பதால் அந்த நேரத்தில் இயற்கையும் இல்லை. இயற்கையே இல்லாத போது பெரு வெடிப்பின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்தது யார்? இயற்கையின் இடத்தில் இறைவனையே அன்றி வேறொன்றையும் வேறொருவரையும் காணமுடியாது என்பதையே இது காட்டுகிறது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால் பெருவெடிப்புக்கு முன்பே இயற்கை இருந்தது என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அந்த இயற்கையால் பேரண்டத்தின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்திருக்க இயலாது. ஏனெனில் இயற்கைக்கு சோதிடம் கிடையாது. புலனறிவுக்கு உட்பட்டதை வைத்தே இயற்கை தீர்மானங்களை எடுக்க முடியும்.
பூமியின் ஈர்ப்பு விசையை அதன் இயற்கை என்று கூறினால் பூமி இருப்பதால் தாம் அதில் அதன் இயற்கையாம் ஈர்ப்பு விசை தோன்றியது. இல்லாத பூமியில் இயற்கை தோன்றாது. இயற்கையின் இயற்கையே இப்படியென்றால் பெருவெடிப்பிற்கு முன் இல்லாத பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலை இயற்கையால் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?
பெருவெடிப்பிலிருந்து தோன்றப் போகும் இம்மாபெரும் பேரண்டத்தின் பொருண்மையைக் கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டுமானால் பேரண்டம் தோன்றிய பிறகே அதைச் செய்ய முடியும். பேரண்டம் தோன்ற வேண்டுமானால் பெருவெடிப்பு நிகழ வேண்டும். பெருவெடிப்பு நிகழ வேண்டுமானால் அதனுடைய விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருவெடிப்பின் விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட வேண்டுமானால் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றப் போகும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றல் என்ன என்பது மிகத் துல்லியமாக பெரு வெடிப்புக்கு முன்னரே தெரிந்திருக்க வேண்டும். இயற்கையால் அது சாத்தியமா?
``பெருவெடிப்பு நிகழ்ந்து ஒரு வினாடிக்குப் பிறகு விரிவாற்றல் நூறு ஆயிரம் மில்லியன் மில்லியன் பாகங்களில் ஒருபாகம் அளவு சிறியதாக இருந்திருந்தால் கூட பேரண்டம் இன்றைய நிலையை அடையாமல் குலைந்து போயிருக்கும்!
-STEPHEN HAWKINGS.
(ஸ்டீபென் ஹவ்கிங்க்ஸ் நாத்திகர் என்பது குறிப்படத்தக்கது )
எப்பொருளின் தோற்றமும் முடிவும் அதற்கிடைப்பட்ட காலத்தில் அதனுடைய வாழ்க்கையும் மீறமுடியாத விதி களுக்கு அடிமைப்பட்டுள்ளதோ அவை யாவும் படைப் பினங்களே என்பதை மேலும் விளக்கத் தேவையில்லை.
ஆகவே இப்பொருட்களின் படைப்பாளன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதும் அப்படைப்பாளன் யார்? என்ற கேள்வியும் அர்த்தமுள்ளதாகும். ஆனால் படைப்பாளனுக்கும் கூட மற்றொரு படைப்பாளனைக் கற்பளை செய்யும் அறியாமையிலிருந்து எழும் படைப்பாளனின் படைப்பாளன் யார்? என்ற கேள்வி மிகவும்அர்த்தமற்ற கேள்வியாகும்.
இங்கு நமது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு செய்தி நாத்திகத்திற்கு கடவுளைப் பற்றி பேசும் போது மட்டுமே இது போன்ற அபத்தங்கள் ஏற்படுகின்றன என்பதும் மற்றவை களைப் பற்றிப் பேசும் போது இப்படிப்பட்ட அபத்தங்கள் ஏற்படுவதில்லை என்பதுமாகும். சான்றாக நாத்திகர்கள் பேரண்டம் நிலையானது; என்றும் உள்ளது என்ற எண்ணத்தில் இருந்தவர்கள்.
எனவே பேரண்டம் எப்படித் தோன்றியது? என்று ஆத்திகர்கள் வின வினால் ``பேரண்டம் யாராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை; ஏனெனில் அது என்றும் உள்ளதுஎன பதில்கூறுவார்கள். ஆனால் என்றும் உள்ளவனான கடவுளைப் பற்றி கூறும் போது மட்டும் ``கடவுள் மட்டும் எப்படி தோற்று விக்கப்படாமல் தோன்ற முடியும்? முடியவே முடியாது! என அடம் பிடிப்பார்கள்.
எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிகிறான். வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே இழப்பை அடைந்தவர்கள் என்று கூறுவீராக! (29:52)
by : HASSAN
இஸ்லாம் அடிமைகளை ஆதரிக்கின்றது ..அதனால் இஸ்லாத்தில் சமத்துவம் இல்லை என்று கூறும் சிலரின் கூற்றில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதற்காக இந்தத் தொடர் எழுதப்படுகின்றது.
அடிமைத் தனம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாகவே இருந்து வந்த ஒரு கொடுமையான பழக்கம். கேட்பார் யாருமில்லை... தடி எடுத்தவன் தண்டல் காரன் என்ற பழமொழி இன்றைக்கு எவ்வாறு பொருந்துமோ, அதைவிட பல்லாயிரம் மடங்கு கூடுதலாக அன்று பொருந்தியது.
ஒரு மனிதன், மற்றொரு மனிதனின் சொத்தாக கருதப்பட்டான்
வாரச் சந்தையில் மனிதர்களும் விற்கப்பட்டனர்
தந்தை தன் வாரிசுகளை விற்கவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ அதிகாரம் கொண்டவனாக இருந்தான்
தங்களிடம் உள்ள அடிமைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து,
சமூகத்தில் அவர்களின் அந்தஸ்துகள் உயர்ந்தன
ஒரு அடிமைக் கொல்லப்பட்டால், அதற்க்கு எந்த தண்டனையும் கிடையாது
எந்த ஒரு ரோமன் பேரரசிடரிடமும், குறைந்த அளவு 20,000 அடிமைகள் இருந்தனர்
தங்களின் பொழுது போக்கிற்காக, அடிமைகளை சண்டையிட வைத்து சாகடித்த சம்பவங்கள் ஏராளம்
சமீப காலங்களில் கூட இன்னும் மோசமாக பலராலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது
macquirealtory.com
அமெரிக்கர்களால் நடை முறைப்படுத்தப்பட்டு வந்த அடிமை முறை (trans-atlantic) மனித வரலாற்றில் நடந்த கொடூரமான சம்பவங்களில் ஒன்று
இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட்ட தேவதாசி முறை
அந்நிய நாட்டில் உள்ள ஒருவரை எந்த வித சட்ட விதிமுறைகளும் இல்லாமல், கடத்திச் சென்று, குவாண்டானமோ சிறைச்சாலையில் அடைத்து வைத்திருப்பதும் நவீன கால நாயகர்களின் சாதனை
இன்னும் நாட்டிற்கு நாடு, மதத்திற்கு மதம் இவைகள் மாறுபட்டு இருப்பதை நாம் காணலாம்.
இதை இஸ்லாம் எப்படி அணுகியது? இஸ்லாத்தின் விதிமுறைகள், மற்றவர்களின் கொள்கையோடு எப்படி வேறுபடுகின்றது என்பதை அடுத்தடுத்த பாகங்களில் பார்ப்போம்.
இஸ்லாம், இறைச் சட்டமாக இருப்பதால் தான், எந்தக் காலத்திற்கும் மாற்றம் தேவைப்படாத, ஒரு பிரச்சனையின் அனைத்துக் கோணங்களையும் அலசி அதற்க்கான முடிவுகளைத் தருகின்றது.
விமர்ச்சனம் செய்பவர்களை, உங்கள் வாதங்களில் நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு எக்காலத்திலும் மாற்ற முடியாத அளவிற்கு தீர்வுகளைத் தாருங்கள் என்றும் கேட்கின்றது.































